Press "Enter" to skip to content

ஊர்காவற்துறையில் மூன்று லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்ட மாணவன் அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைப்பு!

ஊர்காவற்துறையில் மூன்று லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்ட சிறுவன் அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைப்பு.

ஊர் காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்ட 15 வயதுடைய பாடசாலை மாணவனை, அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள சான்று பெற்ற சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டார்.

3 லீற்றர் கசிப்பு மற்றும் 16 லீற்றர் கோடாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஊர்காவற்துறை விசேட புலனாய்வு பொலிசார் ஹரிதாஸ் தலைமையிலான அணியினர் கைது செய்திருந்தனர்.

அவரை இன்றைய தினம் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *