யாழ் மாவட்ட பாதுகாப்பு படை கட்டளை தளபதியால் சங்கானையில் பெண்தலைமைத்துவ குடும்பமொன்றிற்கு இன்று காலை கையளிக்கப்பட்டது .
புலம்பெயர்தேசத்தை சேரந்த வின்சன் சின்னதுரையின் தாயார் ஜெசி சின்னத்துரையின் நினைவாக அவருடைய நிதிபங்களிப்பில் யாழ் மாவட்ட 513 வது படைப்பிரிவினரால் சங்கானை பகுதயில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு படைப்பிரிவினரின் மனித வலுவோடு கட்டப்பட்ட வீடே இன்றைய தினம் யாழ் மாவட்ட பாதுகாப்பு படை கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.சி .எஸ்.பி விஜயசுந்தர தலைமையில் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் பயனாளிகளுக்கான வீட்டு உபகரணங்களும் ராணுவ கட்டளை தளபதியால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி, சங்கானை பிரதேச செயலாளர், இராணுவ அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment