Press "Enter" to skip to content

நல்லொழுக்க சம்மேளனத்தின் பொன் விழா நிகழ்வு சங்கானை கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது!

வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் 50 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்ட பொன் விழா இன்று காலை சங்கானை கலாச்சார மண்டபத்தில் சம்மேளனத்தின் தலைவர் புஸ்பராசா தலைமையில் இடம்பெற்றது.

இதன் பொழுது 50 வருட நிறைவையொட்டி 50 பொருண்மியம் நலிந்த மாணவர்களுக்கும், 50 பெண் தலைமைத்துவ குடும்பத்தினருக்கும்  உணவுப்பொதி மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், சங்கானை பிரதேச செயலாளர் பிறேமினி, கலாநிதி ஆறுதிருமுருகன், யாழ். பல்கலை பதிவாளர் காண்டீபன், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி ஜெசிதரன், வைத்திய கலாநிதி சிவசங்கர், காவேரி கலாமன்ற நிறுவுனர் யோசுவா அடிகளார், பிறேமறாஜ் இணைப்பாளர் ஹெல்த்தி லங்கா, மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *