நாட்டில் மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (திங்கட்கிழமை) பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இதன்படி 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதவிப் பிரமாணம் செய்யவுள்ள அனைத்து அமைச்சர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் பதவிப் பிரமாணம் செய்யும் நேரம் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றின் பெயர்கள் ஜனாதிபதியிடம் முன்மொழியப்பட்ட போதிலும் அவர்களில் சிலர் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது





Be First to Comment