யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.
பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதி வழியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டி ஒன்றில் மது போதையில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவே மாணவர்களை வழி மறித்து தாக்கி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
Be First to Comment