யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினரால் குறித்த கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கேரள கஞ்சா கடத்தல் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து இன்று அதிகாலை அங்கு சென்ற இராணுவத்தினர், கரையொதுங்கி வாடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 217 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகளை மீட்டனர்.
இவ்வாறு மீட்கபட்டவை வல்வெட்டித்துறை காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.





Be First to Comment