Press "Enter" to skip to content

இராணுவ சுற்றிவளைப்பிலிருந்த தப்பி ஓடியவர்கள் வல்வெட்டித்துறையில் கைது!

யாழ்.பொலிகண்டி பகுதியில் கஞ்சா கடத்தல்காரர்களை சுற்றிவளைத்த இராணுவத்தினரிடமிருந்து தப்பி ஓடிய 3 பேர் வல்வெட்டித்துறையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

நேற்று காலை பொலிகண்டி வாடியடி பகுதியில் கஞ்சா கடத்தல்காரர்களை இராணுவத்தினர் சுற்றிவளைத்திருந்தனர். எனினும் கடத்தல்காரர்கள் தப்பி ஓடிய நிலையில் சுமார் 217 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் பலாலி அன்ரனிபுரத்தைச் சேர்ந்த 20, 28 மற்றும் 30 வயதுடைய மூன்று பேரை வல்வெட்டித்துறையில் கைது செய்துள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *