சேரிகளற்றநாட்டை நிறுவுவதன் மூலம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என நேற்று (3) காலை அலரிமாளிகையில் நடைபெற்ற 36ஆவது உலக வாழ்விட தினத்தின் தேசியக் கொண்டாட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் குழந்தைகள் தங்கள் எதிர்காலத்தை வீடுகளில் கட்டியெழுப்பக்கூடிய சூழலை உருவாக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு 650 வீட்டு உரிமைப் பத்திரங்களும் வழங்கப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரில் அபிவிருத்தி அடையாத 1200 தோட்டங்களை இலக்காகக் கொண்டு நிரந்தர வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.
Be First to Comment