Press "Enter" to skip to content

சாதனை படைத்த கொழும்பு தாமரை கோபுரம்! பார்வையிட படையெடுக்கும் மக்கள்

தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான ‘தாமரை கோபுரத்தின்‘ செயல்பாடுகள் கடந்த 15 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமாக கருதப்படும் தாமரை கோபுரம்பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட முதல் 15 நாட்களில் 100,000இற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

உலக சிறுவர் தினமான சனிக்கிழமையன்று 11,752 பேர் தாமரை கோபுரத்தை பார்வையிட்டுள்ளதுடன்,ஞாயிற்றுக்கிழமை கிட்டத்தட்ட 10,000 பேர் கோபுரத்தை பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சாதனை படைத்த கொழும்பு தாமரை கோபுரம்! பார்வையிட படையெடுக்கும் மக்கள் | Srilanka Colombo Lotus Towe

113 மில்லியன் டொலர் செலவு

இதேவேளை, சுமார் 113 மில்லியன் டொலர் செலவில் தாமரைக் கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு சீன நிறுவனம் 88.65 டொலர் கடனுதவியை வழங்கியுள்ளது.

சாதனை படைத்த கொழும்பு தாமரை கோபுரம்! பார்வையிட படையெடுக்கும் மக்கள் | Srilanka Colombo Lotus Towe

சீனாவிடம் பெறப்பட்ட கடன் தவணை 2024 ஆம் ஆண்டிற்குள் செலுத்தி முடிக்கப்பட உள்ளது. அத்துடன் ஏற்கனவே கடனாகப் பெறப்பட்ட சுமார் 66 மில்லியன் டொலர்கள் மீளச் செலுத்தப்பட்டுள்ளன.

சாதனை படைத்த கொழும்பு தாமரை கோபுரம்! பார்வையிட படையெடுக்கும் மக்கள் | Srilanka Colombo Lotus Towe

 

தாமரை கோபுரத்திற்கு வரும் பொதுமக்களுக்காக தரை தளம், பிரபலமான உணவகங்கள், நினைவுப்பரிசு அங்காடிகள் என்பவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதோடு, பல முன்னணி வணிக வங்கிக் கிளைகளும் தரை தளத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் தளம் , அலுவலக வசதிகளுக்காக பயன்படுத்தப்படுவதுடன் டிஜிட்டல் சினிமா அனுபவத்தைப் பெறவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *