கொட்டடி லைடன் சந்தி பகுதியில் யாழ்ப்பாண நகரில் இருந்து கொட்டடி நோக்கி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில்
மோட்டார் சைக்கிள் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவத்தில் மரணமாகியுள்ளதோடு மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
உயிரிழந்தவர் அதே இடத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது விபத்து தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
Be First to Comment