பாடசாலை மைத்தானத்தில் போதைப் பொருளுடன் நடமாடிய 22 வயதான இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 8 கிராம் 229 மில்லிகிராம் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றது.
குறித்த சம்பவம் ஹிக்கடுவ தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றிருக்கின்றது. சில காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஹெரோயின் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில்
ரத்கம முகாமின் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இருபத்தி இரண்டு வயதுடைய, ஹிக்கடுவ களுபே பகுதியைச் சேர்ந்தவர்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹிக்கடுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
Be First to Comment