வடக்கு மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வெல்லவ ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு(04) ரயிலொன்று தடம் புரண்டமையால், வடக்கு மார்க்கத்திலான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்திருந்தது.
இவ்வாறு தடம் புரண்ட ரயில் பெட்டிகள் இன்று(05) அதிகாலை தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சரக்கு ரயிலொன்றே நேற்றிரவு(04) தடம் புரண்டது
Be First to Comment