தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஆபத்துப் பிரிவில் உள்ள குடும்பங்கள் மற்றும் தனி நபர்களுக்கான நலத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி 3.1 மில்லியன் மக்களுக்கு நன்மைகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் இன்று (06) முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
நன்மைகளைப் பெறுவதற்கு www.wbb.gov.lk என்ற இணையத்தளத்தில் ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Be First to Comment