Press "Enter" to skip to content

யாழில் வயோதிப தம்பதியரை கத்திமுனையில் அச்சுறுத்தி 5 பவுண் நகை கொள்ளை

யாழ். கரவெட்டிப் பகுதியில் தனிமையிலிருந்த வயோதிபத் தம்பதியினரை கத்தி முனையில் அச்சுறுத்தி அவர்களிடமிருந்த 5 பவுண் தங்க நகை கொள்ளையிடப்பட்டுள்ளது.


நேற்றுப் புதன்கிழமை அதிகாலை நேரம் கரவெட்டி மாலுசந்தியிலுள்ள வீடு ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் புகுந்த இரண்டு கொள்ளையர்கள் வயோதிபத் தம்பதியரை கத்தி முனையில் அச்சுறுத்தி விட்டு அவர்களிடமிருந்த 5 பவுண் தங்க நகையை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடிபொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *