வத்தளைப் பிரதேச வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி ஒரு கோடி ரூபா கப்பம் பெற முயன்ற குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வத்தளை பிரதேசத்தில் உள்ள பழைய இரும்பு வர்த்தகர் ஒருவர் புகையிரத திணைக்களத்தில் இருந்து 1700 தொன் பழைய இரும்பைப் பெற்றுக் கொள்வதற்கான டெண்டர் ஒன்றைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
அதற்கான முற்பணத்தை அவர் செலுத்தியுள்ள நிலையில் புகையிரத திணைக்களம் அவருக்கான பழைய இரும்புத் தொகையை இன்னும் விடுவிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இந்நிலையில் மேற்குறித்த வர்த்தகரை சந்தித்துள்ள சந்தேகநபர்கள் மூன்று பேரும் நாட்டுத்துப்பாக்கியொன்றை காட்டி அச்சுறுத்தி, தங்களுக்கு ஒரு கோடி ரூபா அல்லது புகையிரத திணைக்களத்தின் பழைய இரும்புத் தொகையில் இருந்து 500 தொன் இரும்பை கப்பமாக தர வேண்டும் என்று அச்சுறுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிரிபத்கொடை பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டு இன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை செய்யப்பட்டனர்.
Be First to Comment