இலங்கையைப் போன்ற ஒரு சூழ்நிலையை பாகிஸ்தானும் எதிர்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விரும்புவதாக பாகிஸ்தானிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அரசியல்வாதியாக மாறிய கிரிக்கெட் வீரர் தலைமையிலான முந்தைய அரசாங்கத்தின் முடிவுகளே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்டில், சர்வதேச நாணய நிதியம், அதன் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் மறுமலர்ச்சிக்கு ஒப்புதல் அளித்ததால், பாக்கிஸ்தான் நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்கொண்டது.
எவ்வாறாயினும், இம்ரான் கான் தலைமையிலான முந்தைய ஆட்சியால் உருவாக்கப்பட்ட குழப்பத்திற்கான விலையை நாடு தொடர்ந்தும் செலுத்துகிறது என்று ஷெரீப் குற்றம் சுமத்தியுள்ளார்.
Be First to Comment