நாவுல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
‘நாவுல சுத்தா’ என அழைக்கப்படும் 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கொலை இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் மிளகாய் தூள் வைக்கப்பட்டிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இறந்தவரின் தாயார் அருகிலுள்ள மற்றொரு வீட்டிலும், அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வேறு இடத்திலும் வசித்து வருகின்றனர்.
சில நாட்களாக மகனை காணாத தாய் குறித்த நபர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று பார்த்த போது வெட்டுக்காயங்களுடன் குறித்த நபர் விழுந்து கிடந்ததை பார்த்துள்ளார்.
‘நாவுல சுத்தா’ என அழைக்கப்படும் இவர், போதைக்கு அடிமையானவர்களுக்கு எதிராக கடுமையாக செயற்பட்டு வருபவர் என உறவினர்கள் கூறுகின்றனர்.
குறித்த நபர் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் பல தடயங்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
போதைக்கு அடிமையானவர்களுக்கு எதிராக செயற்பட்டு வந்தவர் வெட்டிப்படுகொலை!
More from UncategorizedMore posts in Uncategorized »
- பாராளுமன்ற உரைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா?
- ரொஷான் ரணசிங்கவுக்கு காலவகாசம்
- அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எதிர்வரும் 6 மாதங்களில் விநியோகிக்க முடியும் – மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!
- இலங்கை போக்குவரத்துச் சபைக்கு இலாபம் இல்லை என்றால் தனியார் மயமாக்க வேண்டி ஏற்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
- சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி திடீர் மரணம்: பரிசோதனையில் வெளியான தகவல்!
Be First to Comment