ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், இது ஒரு நாடு என்ற வகையில் பாரிய பிரச்சினையாகும் எனவும், சர்வதேசத்தை வென்றதாக கூறிக்கொள்ளும் அரசாங்கத்திற்கு இது பலத்த அடியாகும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
வரலாற்றில் முதல் தடவையாக பொருளாதார குற்றங்கள் தொடர்பான பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், வாக்களிப்பில் இருந்து விலகிய நாடுகளை வெற்றிகொள்ளும் வேலைத்திட்டமொன்று அரசாங்கத்திடம் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
Be First to Comment