வீதியால் சென்ற 14 வயது சிறுவன் மீது வீதியல் நின்ற 20 வயது இளைஞன் கத்தியால் குத்திய சம்பவம் காத்தான்குடி பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுவன் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான் இதன் போது அங்கு வீதியில் நின்ற ஒருவன் சிறுவனை பார்த்து என்னடா என்னை பார்க்கின்றாய் என கேட்டு கொண்டு சிறுவன் மீது கத்திகுத்து தாக்குதலை மேற்கொண்டார்.
இதனை அடுத்து சிறுவன் கத்தியதை அடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக படுகாயமடைந்த சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்ததுடன் கத்திகுத்து தாக்குதலை நடாத்திய இளைஞனை பிடித்து
பொலிஸாரிடம் ஒப்படைத்ததை அடுத்து அவனை பொலிஸார் கைது செய்ததுடன் இவர் போதைபொருள் பாவிப்பதாகவும் இதனால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Be First to Comment