தற்போதுள்ள அமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்றுக்கொள்கிறது என அக்கட்சியின் பதில் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்து நிற்போம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம் என்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு பங்களித்த இளம் தலைமுறையினரால் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ‘ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கியதோடு, இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ மஹிந்த தலைமையில் பொதுக்கூட்டம்
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment