மனைவியை நையாண்டி செய்த இளைஞனை கணவன் கத்தியால் குத்திய சம்பவம் வவுனியா நகர் பகுதியில் நேற்று இரவு 7.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,
வவுனியா – இலுப்பையடிப் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு சென்ற இளம் குடும்ப பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் நையாண்டி செய்துள்ளார்.
குறித்த இளைஞன் அப்பகுதியில் உள்ள புடவை விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றும் நிலையில் சம்பவம் தொடர்பாக குறித்த பெண் தனது கணவருக்கு கூறியுள்ளார்.
இதனையடுத்து கணவனும், மனைவியும் குறித்த புடவை விற்பனை நிலையத்திற்குச் சென்று வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் பின்னர் வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் மேற்படி பெண்ணின் கணவன் புடவை விற்பனை நிலையத்தில் வேலை செய்த இளைஞனை கத்தியால் குத்தியுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த வவுனியா – முருகனுார் பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை கத்திக் குத்து தாக்குதலை நடத்திய வவனியா – கல்வீரங்குளம் பகுதியை சேர்ந்த 28 வயதான இளம் குடும்பஸ்த்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Be First to Comment