Press "Enter" to skip to content

வல்வெட்டித்துறையில் மோட்டார் சைக்கிளை திருடி பருத்தித்துறையில் வழிப்பறி..! இரு பொலிஸ் பிரிவுகள் தனித்தனியாக விசாரணை..

வல்வெட்டித்துறையில் மோட்டார் சைக்கிளை திருடி பருத்தித்துறையில் பெண் ஒருவருடைய தங்க சங்கிலியை அறுத்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வல்வெட்டித்துறையில் வீடொன்றின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த சுமர் 10 லட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று மாலை திருடிச் செல்லப்பட்டிருக்கின்றது.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு  செய்யப்பட்டது. இந்நிலையில் அதே மோட்டார் சைக்கிளினை பயன்படுத்தி பயணித்த இருவர், நேற்று மாலை பருத்தித்துறை திக்கம் பகுதியில்

வீதியில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரித்துத் தப்பித்தனர். அத்துடன் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை ஆகிய இருவேறு இடங்களில் வழிப்பறி கொள்ளைக்கு முற்பட்டபோதும் அந்தப் பகுதியில் இருந்தவர்கள்

சாதூரியமாகச் செயற்பட்டதால் கொள்ளையர்கள் தப்பித்துள்ளனர். இந்த திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் தனித்தனியே விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *