வவுனியா மாமடு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் இன்று (7) மாலை 5.30 மணியளவில் தாமரை பறிக்க சென்ற பெண் மீது மின்னல் தாக்கியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
அட்டமஸ்கட, மாமடுவ, பகுதியை சேர்ந்த 50வயதுடைய RA சந்திரலதா என்கின்ற பெண்மணியே பலியானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment