Press "Enter" to skip to content

இன்று மீலாதுன் நபி திருநாள்

முஸ்லிம் மக்களின் மீலாதுன் நபி திருநாள் இன்று நினைவு கூறப்படுகிறது. நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் இவ்வாறு மீலாதுன் நபி தினமாக நினைவு கூறப்படுகிறது.

இதேவேளை, உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களின் மார்க்கப் போதகராக விளங்கிய நபிகள் நாயகத்தின் உபதேசங்கள், முன்பை விட இன்றைய சமூகத்தில் நிலவும் சூழ்நிலையைப் போக்க உதவும் என தாம் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்ந்த மனிதப் பண்புகளுடன் பிறந்த அனைவரும் ஒருவரையொருவர் விலகிச்செல்ல முற்படுவதை தவிர்த்து, நபிகளாரின் போதனையைப் பின்பற்றி அனைவரும் புரிந்துணர்வுடன் நடப்பதே அவருக்குச் செய்யும் கௌரவமாகும்.

ஒட்டுமொத்த மனித சமூகத்தைப் போன்று ஏனைய அனைத்தினதும்  பாதுகாப்பு, பயன்பாடு, மரியாதை மற்றும் நேர்மை குறித்த முஹம்மத் நபியின் கருத்து உண்மையின் உருவகமாகும்.

அவரின் போதனைக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதன் மூலம் ஆன்மீக ரீதியில் மட்டுமன்றி சமூக ரீதியாகவும் வெற்றி பெற முடியும்.

அல் அமீன் ‘நம்பிக்கையாளர்’ என்ற புனைப்பெயர் கொண்ட முஹம்மது நபி நாயகத்தின் பிறந்த நாள், இலங்கை  மற்றும்  உலகளாவிய முஸ்லிம்கள் உள்ளிட்ட ஏனையோரினதும் ஆன்மீக, சமூக முன்னேற்றம் மற்றும் அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என தாம் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *