காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போது பல்வேறு காரணங்களால் உயிரிழந்த மக்களை நினைவு கூருவதற்காக இன்று (09) பிற்பகல் திரண்டிருந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்போது பலர் கைது செய்யப்படவுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது பல்வேறு காரணங்களால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் இன்று மாலை 5.45 மணியளவில் காலி முகத்துவாரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடினர்.
நிகழ்வு தொடங்கியதும், பொலிசார் அவர்களை கலைந்து செல்லும்படி ஒலிபெருக்கி மூலம் தெரிவித்தனர்.
ஆனால், போராட்டக்காரர்கள் அதை ஏற்காததால், அவர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, பொலிஸாரும், கலகம் அடக்கும் பிரிவினரும் கூட்டத்தைக் கலைக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்
Be First to Comment