ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது அரசியல் ரீதியாக சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்ற நிலையில் அவரது முன்னோக்கிய பயணத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
´ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்´ என்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டம் இன்று (08) காலை பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.
அங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,
“ ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டம். அப்போது ரணிலை நாம் திட்டினோம். ரணில் ஐ.தே.க. காரர் என்று. இப்போது ரணில் எங்களுடன் இருக்கிறார். தற்போது நாம் ரணில் சிறந்தவர் என்கிறோம். அவர் இப்போது சரியான பாதைக்கு திரும்பிவிட்டார் என்று நம்புவதால்தான். நாங்கள் அவருக்கு ஆதரவளித்து இந்த பயணத்தைத் தொடர உதவுகிறோம்
Be First to Comment