முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன, கண்ணீர் விட்டு அழுத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் களுத்துறையில் இன்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.
இந்த கூடடத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, மே 9 ஆம் திகதி தனது வீடு தாக்கப்பட்ட சம்பவங்களை நினைவு கூர்ந்து ரோஹித அபேகுணவர்தன கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
இதன்போது அன்றை தினம் எனது வீட்டில் இடம்பெற்ற தாக்குதலின் போது அதிஷ்டவசமாக எனது தாயார் உயர் தப்பினர் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment