வரலாற்று பெருமை மிகு தருணம். வடக்கையும் கிழக்கையும் ஆன்மீகத்தால் முத்தமிழால் கல்விப் பணிகளால் இணைத்த ஈழம் தந்த சைவத்தமிழ்ப் பெரியார் சுவாமி விபுலானந்த அடிகளாரின் உருவச்சிலை யாழில் முக்கிய நெடுஞ்சாலையான யாழ் – மானிப்பாய் – காரைநகர் வீதியில் யாழ் நுழைவாயிலில் கிழக்கின் முதன்மை ஆதீனமான தென் கயிலை ஆதீனம் அகத்தியர் அடிகளாரால் திறந்து வைக்கப்பட்டது
அதே போன்று உலகின் முதல் தமிழ் பேராசிரியரான விபுலானந்தரால் தமிழ் உலகின் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்ட புரட்சி புதுமை கவிகளிற்கு சொந்தக்காரரான
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் சிலை துணைவேந்தர் சிவ. சிறிசற்குணராசாவால் திறந்து வைக்கப்பட்டது. யாழ் மாநகர முதல்வர் அகில இலங்கை சைவ மகா சபைத் தலைவர் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்,
Be First to Comment