மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (9ம் திகதி) பௌர்ணமி தினத்தன்று விகாரைகளின் மின்விளக்குகளை அணைத்து இருளில் வைப்பதற்கு பிக்குகள் எடுத்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக, தேவாலயங்களிலும் மின்விளக்குகளை அணைத்து ஆதரவளிப்பதாக பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளாத தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி இன்று மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை விகாரைகளின் விளக்குகள் அணைக்கப்படும் போது தேவாலயங்களும் இருளில் மூழ்கும். கொழும்பு பேராயர் மாளிகையில் நேற்று (8) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிறில் காமினி பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதிகரித்துள்ள மின்கட்டணத்தினால் மத ஸ்தலங்களும் பொது மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதிகரிக்கப்பட்ட மின்கட்டணத்தினால் பொது மக்கள் மட்டுமின்றி மத வழிபாட்டுத் தலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த அடையாளப் போராட்டம் நடத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விகாரைகள் இன்று இருளில் மூழ்குமா..? கர்தினாலும் போராட்டத்திற்கு ஆதரவு
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment