இன்றைய தினம் 10/10/2022ம் திகதி விசேட விடுமுறையை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் பாடசாலைகள் வழமைபோல் இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எனவே சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளரை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
அதேநேரம் இன்றைய மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வங்கிகளுக்கு விஷேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அத்துடன், கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் கொடுக்கல் வாங்கல்களும் இன்று இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது
Be First to Comment