பிக் பாஸ் 6ம் சீசனில் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளர் ஜனனி என்பவர் போட்டியாளராக வந்திருக்கிறார்.
அவரை அறிமுகப்படுத்திய கமல் இவரும் லாஸ்லியா போல செய்தி வாசிப்பாளரா என கேள்வி எழுப்பினார்.
செய்தி வாசிப்பாளர் + anchor என அவர் பதில் சொல்ல, கமல் அவரது அறிமுக வீடியோவை காட்டினார்.
அதன் பின் பேசிய ஜனனி “வருங்காலத்தில் என்ன ஆக போறீங்க என நான் நர்சரி ஸ்கூல் படிக்கும்போது டீச்சர் கேட்டார்.
அப்போது எல்லாரும் பல விஷயங்கள் சொன்னார்கள். நான் மட்டும் த்ரிஷா ஆக போகிறேன் என கூறினேன்” என சொல்கிறார்.
‘உங்களுக்கு போட்டி வந்துடுச்சுனு நான் திரிஷாவை நேரில் பார்க்கும்போதே சொல்கிறேன்’ என கமல் அப்போது கூறி இருக்கிறார்.
Be First to Comment