Press "Enter" to skip to content

கடற்றொழில் சார் அதிகாரிகளுடன் தொழில்சார் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தினை சேர்ந்த உயரதிகாரிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, எதிர்கொள்ளப்படும் தொழில்சார் செயற்பாடுகள் தொடர்பாக எடுத்துரைத்ததுடன் தேவையான ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை

இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவத்தில் உள்ள துறைமுகங்களில் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்களின் முன்னகர்வுகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். இதன்போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கவும் கலந்து கொண்டிருந்தார்.

இதனிடையே

காலி மீன்பிடித் துறைமுகத்தில், இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவத்தில் உள்ள  ஐஸ் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள அமோனியா வெளியேற்றம் உட்பட்ட குறைபாடுகளை சரி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் ஐஸ் தொழிற்சாலையை வினைத்திறனுடன் செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர்,  மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள், ஐஸ் தொழிற்சாலை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *