Press "Enter" to skip to content

கோணமலையின் புனிதம் நிச்சயமாக காக்கப்படும்

10 ஜப்பசி 2022

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் புனிதத்தன்மை பாதுகாக்கப்படும் அமைச்சர டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு.

வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் புனிதத்தன்மை பாதுகாக்கப்படும் ஆலையச் சூழல் பாதிக்கும் வகையிலான செயற்பாடுகள் இருக்குமாயின் அவை நிவர்த்தி செய்யப்படும் என்கின்றார் கடல் தொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா.

இது தொடர்பில் வருவதான செய்திகள் தொடர்பாக கடந்த 12.09.2022 அமைச்சரவை கூட்டத்தில் பிரஸ்தாபித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எந்தவொரு மதத்தினரின் உணர்வுகளையும் பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியிருந்தார் .

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைவாக ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் , குறித்த விடயம் தொடர்பாக ஆராயும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மதவிவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சரும் இணைந்து திருகோணமலைக்கான களவிஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர் .

மேற்படி விடயம் தொடர்பில் நிலமைகளை நேரடியாக ஆராய்வதுடன் ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி, இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமாயின் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *