ஹெரோயின் போதை ஊசி மருந்துகளுடன் இருவர்.
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் போதை ஊசி மருந்துகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட விசேட குற்றத்தடுப்பு போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் அரசடி பகுதி சேர்ந்த 28 வயதுடைய நபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உப பொலிஸ் பரிசோதகர் மேனன் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, சந்தேக நபர்கள் கோப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து 10 போதை ஊசி சிறின்ஷ், இரண்டு கிராம் ஐஸ் போதைப் பொருள், ஒன்றரை கிராம் ஹெரோயின் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Be First to Comment