உலக வர்த்தக மையத்தில் நிதி நிறுவனமொன்றை நடத்திக் கொண்டு கோடீஸ்வரர்களை ஏமாற்றி பெரும் தொகையை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியாமாலியுடன் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
அதற்குப் பதிலளித்த பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, முல்லேரியா மனநோய் வைத்தியசாலையில் அந்தப் படங்கள் எடுக்கப்பட்டவை எனத் தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கும் மற்றவர்களுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை என்றும் அப்போது தான் இன்ஸ்டிடியூட் ஒப் ஹெல்த் சயின்ஸில் நடைபெற்ற மனநோயாளிகளுக்கான பயிலரங்கில் பங்கேற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
Be First to Comment