Press "Enter" to skip to content

ரஷ்ய படைகளின் தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 220 பேர் பலி

ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 220 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 8 மாதங்களாக போர் தொடுத்து வரும் நிலையில் ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷ்யா சமீபத்தில் தன்னுடன் இணைத்து கொண்டுள்ளது.

இதனால் கோபமடைந்துள்ள உக்ரைன் இராணுவம் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டெடுக்க ரஷ்ய படைகளுடன் தீவிரமாக போராடி வருகின்றது.

ரஷ்ய படைகளின் தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 220 பேர் பலி | Russia Eliminates Over 220 Ukrainian Troops

உக்ரைன் வீரர்கள் 220 பேர் பலி

 

இந்நிலையில் கார்கீவ் பிராந்தியத்தில் ரஷ்ய படைகள் வசம் உள்ள குப்யான்ஸ்க் நகரை மீட்டெடுக்க உக்ரைன் இராணுவம் முயன்றபோது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 220 பேர் கொள்ளப்பட்டுள்ளதாக ரஷ்ய இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய படைகளின் தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 220 பேர் பலி | Russia Eliminates Over 220 Ukrainian Troops

 

இதுதொடர்பாக அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிக்கையில், “குப்யான்ஸ்க் நகரை கைப்பற்றும் நோக்கில் பெர்ஷோத்ரவ்னேவ் மற்றும் யாஹிட்னே கிராமங்களை நோக்கி எதிரி படைகள் தாக்குதல் நடத்த முயன்றன.

ஆனால் உக்ரைனிய துருப்புகளின் அனைத்து தாக்குதல்களும் ரஷ்ய இராணுவத்தால் முறியடிக்கப்பட்டன.

இதில் 220 வீரர்கள் 0கொல்லப்பட்டுள்ளதுடன், 2 பீரங்கிகள், 5 காலாட்படை சண்டை வாகனங்கள் மற்றும் 4 கார்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *