Press "Enter" to skip to content

இன்றும் மக்கள் இராஜபக்சேக்களையே நேசிக்கின்றனர்

இலங்கை மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை (Mahinda Rajapaksa) நேசிக்கிறார்கள் என்பதை களுத்துறை நிரூபித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபே குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

இலங்கை மக்கள் மஹிந்த ராஜபக்ஷவையே நேசிக்கிறார்கள்! ரோஹித | Sri Lankan People Love Mahinda Rajapaksa Rohitha

இன்று (10-10-2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உடைக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபே குணவர்தன,

கடந்த சில நாட்களாக போராட்டத்தின் பின்னர் எமது கட்சியையும் எதிர்கட்சித் தலைமையையும் கடுமையாக விமர்சித்தார்கள். சிலர் சில வியாக்கியானங்களை முன்வைத்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இப்போது துண்டு துண்டாக உடைந்து பத்து பேருடன் ஒன்றிணைக்க முடியாத நிலையை நாம் கண்டோம்.

மஹிந்த ராஜபக்ச என்ற அந்த ஆதரவற்ற தலைவரையும் எமது கட்சியின் இலட்சிய தலைவரையும் இந்நாட்டு மக்கள் இன்றும் நேசிக்கின்றார்கள் என்ற செய்தியை களுத்துறைனில் இருந்து ஒன்றுபட்டு எழுவோம் என்ற தொனிப்பொருளில் நிரூபித்தோம் என தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *