Press "Enter" to skip to content

கிண்ணியா, ஈச்சந்தீவு பிரதேச வயல் காணிகளை மீட்டுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை !

கிண்ணியா, ஈச்சந்தீவு பிரதேசத்தினை சேர்ந்த மக்கள், தமது வயல் காணிகளை மீட்டுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்தூள்ளனர்.

அதாவது, 1969 ஆண்டு தொடக்கம் ஈச்சந்தீவு பகுதியில் சுமார் 177 ஏக்கர் காணிகளில்  வயல் செய்கையில் ஈடுபட்டுவந்த தமிழ் மக்கள், 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரங்கள் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் கைவிடப்பட்டிருந்தது.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் சொந்த இடங்களுக்கு திரும்பிய மக்கள், தமது காணிகளில் வயல் செய்கையை மேற்கொள்ள முற்பட்ட போதிலும் பிரதேச அதிகாரிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே பாதிக்கப்பட்ட மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

திருகோணமலையில் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களின் இருப்பையும் பாரம்பரியங்களையும் பாதுகாக்கும் வகையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழர் பேரவை என்ற அமைப்பின் முக்கியஸ்தர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சம்பிரதாயபூர்வமாக  சந்தித்து தமது அமைப்பின் நோக்கம் தொடர்பாக தெளிவுபடுத்தியதுடன் எதிர்பார்ப்புகள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *