பேஸ்புக் ஊடாக பரிசுப் பொதிகள் வழங்கப்படுவதாக கூறி ஒரு கோடியே 16 இலட்சத்து 27 ஆயிரத்து 175 ரூபா பண மோசடி தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணை பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தளத்தினூடாக பரிசுப் பொதிகள் வழங்கப்படும் என தெரிவித்து, நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பலரை ஏமாற்றி
பணத்தை வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடச் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்கொடை பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இன்று(12) ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Be First to Comment