நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், நோர்வே முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஷ , எரிக் சொல்ஹெய்ம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நோர்வே உதவிகளை வழங்கும் என எரிக் சொல்ஹெய்ம், மஹிந்த ராஜபக்ஷவிடம் இதன்போது உறுதியளித்துள்ளார்.
நோர்வே மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து செயற்படுகின்றமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
Be First to Comment