வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபரொருவர் 22 வயதுடைய யுவதியை ஏமாற்றி நிர்வாண காணொளிகளை எடுத்து அதனை இணையத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க மினுவாங்கொடை மாவட்ட நீதிபதி உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபருக்கு விளக்கமறியல் ராஜாங்கனை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குடும்ப பிரச்சனைகளை தீர்க்க
குடும்ப பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாகவும், யுவதிகளின் அந்நியரின் சக்தியால் சரி செய்து தருவதாகவும் சந்தேக நபர் குறித்த யுவதியின் தாயிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் சந்தேகநபர் யுவதியின் தாயிடம் யுவதியின் தொலைபேசி இலக்கத்தை கேட்டறிந்ததாகவும், அதன் மூலம் சிறுமியிடம் தகவல் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
பிரச்சனைகளை தீர்க்க தனக்கு முதலில் ஒரு நிர்வாண காணொளி தேவை என சந்தேக நபர் யுவதியிடம் கூறியுள்ள நிலையில், அதற்கு அந்த யுவதி அதற்கு சம்மதிக்கவில்லை.
தொடர்ந்தும் யுவதிக்கு அழைப்பு வருவதாகவும், அவரது கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் சந்தேக நபர் யவதியிடம் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யுவதியை அச்சுறுத்தி வேறு ஆண்களுக்கு விற்பனை
அதன் பின்னர், சந்தேக நபர் அந்த யுவதியின் நிர்வாண காணொளிகளை கையடக்கத் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் யுவதியை அச்சுறுத்தி வேறு ஆண்களுக்கு விற்பனை செய்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் திவுலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட யுவதியை நீர்கொழும்பு பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்திய பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரது தாயாரிடம் ஒப்படைக்க பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது
Be First to Comment