வடக்கில் எந்தவொரு திட்டமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விருப்பத்திற்கு மாறாக முன்னெடுக்கப்படாது – அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவிப்பு!
………
வடக்கில் எந்தவொரு திட்டமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விருப்பத்திற்கு மாறாக மேற்கொள்ளப்படாது என்று தெரிவித்த பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரன, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய, சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் விரிவான கலந்துரையாடலை நடத்தி இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் வரையில், திக்கம் வடிசாலையை தனியார் முதலீட்டில் செயற்படுத்துவது தொடர்பான தீர்மானத்தினை இடைநிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற யாழ் மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினருடனான கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்பதாக யாழ். மாவட்ட பனை தென்னை வள அபிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினை சேர்ந்தவர்களுக்களுடன் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஸ் பத்திரன கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.
திக்கம் வடிசாலையை தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்து செயற்படுத்துவதற்கு பனை அபிவிருத்தி சபை தீர்மானித்துள்ளமையை ஆட்சேபித்த, பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தினர், குறித்த முயற்சியை தடுத்து நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து, அமைச்சர் ரமேஸ் பத்திரனவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த வேண்டுகோளுக்கு அமைய பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இன்றைய கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வடக்கில் எந்தவொரு திட்டமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விருப்பத்திற்கு மாறாக முன்னெடுக்கப்படாது – அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவிப்பு!
More from UncategorizedMore posts in Uncategorized »
- பாராளுமன்ற உரைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா?
- ரொஷான் ரணசிங்கவுக்கு காலவகாசம்
- அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எதிர்வரும் 6 மாதங்களில் விநியோகிக்க முடியும் – மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!
- இலங்கை போக்குவரத்துச் சபைக்கு இலாபம் இல்லை என்றால் தனியார் மயமாக்க வேண்டி ஏற்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
- சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி திடீர் மரணம்: பரிசோதனையில் வெளியான தகவல்!
Be First to Comment