யாழ்.கொக்குவில் பகுதியில் ஆட்டோ சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சந்தேகத்தல் 24 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்குவில் மேற்கு பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.
இதேவேளை கைதான இளைஞன் யாழ்.நீதிவான் நீதிமன்றில் நேற்று காலை முற்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய குழுவை சேர்ந்த மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனினும், குறித்த சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர். வாள்வெட்டு தாக்குதலில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி
யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். கொக்குவில் பகுதியில் கடந்த 05 ஆம் திகதி இந்த வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் குற்றப்புலனாய்வு பிரிவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment