2011 ஆம் ஆண்டு அக்குரம்பொட, பல்லேபொல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இரண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உடல் ரீதியான தண்டனை சிறுவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என இலங்கை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாடசாலையின் பிரதி அதிபருக்கு எதிராக இரு மாணவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
பாடசாலையின் சாப்பாட்டு மண்டபத்தின் கண்ணாடிகள் உடைந்ததற்கு இரண்டு மாணவர்களே காரணம் என்று கருதி பிரதி அதிபர் இரண்டு மாணவர்களையும் அடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்திற்கு தாங்கள் பொறுப்பல்ல என மாணவர்கள் தெரிவித்த போதிலும் மாணவர்களை பிரதி அதிபர் பிரம்பபால் தாக்கியதாக கூறப்படுகிறது . பிறிதொரு குழுவினர் அருகில் இருந்த மாமரத்தின் மீது வீசிய கற்கள் பட்டு கண்ணாடிகள் நொறுங்கியதாக தெரிய வந்துள்ளது. .
பிரதி அதிபர் இந்த உண்மையை புறக்கணித்ததாகவும், தம்மை பிரம்பால் அடித்ததாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த மனுவை நேற்று (13) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், பிரதி அதிபரின் நடவடிக்கை மாணவர்களின் உரிமைகள் பிரிவு.11, மற்றும் 12(1)ஐ மீறுவதாகும்.
இரண்டு மாணவர்களுக்கும் தலா ரூ.75,000 தொகையை வழங்குமாறு பிரதி அதிபருருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறித்த மாணவர்களுக்கு பாடசாலை தலா 25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது
Be First to Comment