Press "Enter" to skip to content

நரபலி கொடுத்து உடலை சமைத்து சாப்பிட்ட கொடூரம் – விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொலிஸாரின் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் இந்த கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது. இதில் ர்மபுரி, பென்னாகரத்தைச் சேர்ந்த பத்மா, எர்ணாகுளம் காலடியைச் சேர்ந்த ரோஸ்லி ஆகிய 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நரபலி கொடுத்து உடலை சமைத்து சாப்பிட்ட கொடூரம் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் | Kerala Couple Sacrifice Two Women For Prosperity

முகமது ஷாபி ஒரு கொடும் சைக்கோ

 

இந்த சம்பவம் தொடர்பில் மந்திரவாதி முகமது ஷாபி, பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோர் எர்ணாகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து 25க்கும் மேற்பட்ட பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கொச்சி நகர பொலிஸ் ஆணையர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

ரோஸ்லிக்கு 10 லட்சம் ரூபா தருவதாகவும், பத்மாவுக்கு 15,000 ரூபா தருவதாகவும் ஆசை காட்டி பகவல் சிங்கின் வீட்டுக்கு ஷாபி அழைத்துச் சென்று இருக்கிறார். மூவரும் சேர்ந்து இந்த இரண்டு பெண்களை மிக கொடூரமாக கொலை செய்து ரத்தத்தால் பூஜை செய்துள்ளனர்.

உடலை துண்டுத் துண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்டதாக லைலா கூறியுள்ளார். முகமது ஷாபி ஒரு கொடும் சைக்கோ ஆவார். பணத்திற்காக எதையும் செய்வார். இவர் மீது எட்டு குற்றவியல் வழக்குகள் உள்ளன.

சமூக வலைதளங்களில் போலி கணக்கு

 

இவர் பெண்களின் உடல்களில் கத்தியால் குத்தி, ரத்தம் பீய்ச்சியடிப்பதை பார்த்து ஆனந்தம் கொண்டுள்ளார். இவர் சமூக வலைதளங்களில் ஸ்ரீதேவி என்ற பெயரில் போலி கணக்கை தொடங்கி, பலருக்கும் வலை விரித்துள்ளார்.

நரபலி கொடுத்து உடலை சமைத்து சாப்பிட்ட கொடூரம் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் | Kerala Couple Sacrifice Two Women For Prosperity

 

பூஜை செய்தால் செல்வம் சேரும் என்று பேஸ்புக்கில் விளம்பரம் செய்துள்ளார். சிலருக்கு ஸ்ரீதேவி என்ற பெயரில் இவர் காதல் வலையும் விரித்துள்ளார்.

அதில் தான் பகவல் சிங்கும் சிக்கினார். ஸ்ரீதேவியை கடைசி வரை காதலித்த பகவல் சிங்கிற்கு, பொலிஸார் கூறும் வரை ஸ்ரீதேவி தான் முகம்மது ஷாபி என்று தெரியாது” என்று அவர் கூறினார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *