கொழும்பு – பொரளை பிரதேசத்தில் இரு பெண்களை பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
பிள்ளைகளுக்கு போதை மாத்திரை வழங்கி யாசகத்தில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டிலேயே குறித்த பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இரண்டு சிறிய பிள்ளைகளுக்கு போதை மாத்திரை வழங்கி அவர்களை நித்திரையடையச் செய்து பின்னர் இவ்வாறு குறித்த பெண்கள் அவர்களைப் பயன்படுத்தி யாசகம் மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பிள்ளைகள் நோய்வாய்ப்பட்டிருப்பதாக கூறி பெண்கள் இருவரும் மக்களிடம் பணம் கோரியுள்ளனர்.
அத்துடன் பிள்ளைகளுக்கு சிகிச்சை அளிக்க பாரியளவு தொகை பணம் தேவைப்படுவதாக மக்களிடம் இந்த இரண்டு பெண்களும் கூறி யாசகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Be First to Comment