யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில்
இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நாவாந்துறை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா ரக வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் மோட்டார் வாகனத்தில் பயணித்த 35 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
பட்டா ரக வாகனத்தை செலுத்திய சாரதி தப்பியோடிய நிலையில், விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Be First to Comment