ரஷ்யா ஆக்கிரமித்துள்ள தமது நாட்டின் பகுதியான கெர்சன் நகரை நோக்கி, உக்ரைன் படைகள் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த ஏவுகணை தாக்குதல்கள் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இதனால், கெர்சன் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை ரஷ்ய பிராந்தியங்களான ரோஸ்டோவ், கிராஸ்னோடர் மற்றும் ஸ்டாவ்ரோபோல் மற்றும் கிரிமியன் பகுதிகளுக்கு வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள திட்டமிட்ட ரஷ்யா, இதுதொடர்பாக பொது வாக்கெடுப்பை நடத்தியது.
பின்னர் இந்த பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக கூறி அந்த 4 பிராந்தியங்களையும் தன்னுடன் இணைத்து கொண்டது.
ஆனால் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என உலக நாடுகள் கண்டித்துள்ளன.
உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷ்யா இணைத்ததை கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், உக்ரைனின் 40-க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது இன்று ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்தே உக்ரைன், ரஷ்யா, ஆக்கிரமித்துள்ள தமது நாட்டின் பிரதேசங்களை நோக்கி உக்ரைன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது
Be First to Comment