Press "Enter" to skip to content

திருட்டுக்களுடன் தொடர்புடைய மூதாட்டி ஒருவர் காங்கேசன்துறை பொலிசாரால் கைது!

திருட்டுக்களுடன் தொடர்புடைய மூதாட்டி ஒருவர் கைது. காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்பு போலீசார் அதிரடி தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் குறைகின்றன.

வல்வட்டிதுறை பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட உடுப்பபிட்டி மற்றும்
வல்வெட்டி பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு மூதாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையின் அடிப்படையின் பொருட்டு இந்த மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஊரிக்காடு நாவலடி பகுதியைச் சேர்ந்த 55 வயது உடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்ணிடமிருந்து 8 பவுன் தாலி, ஒரு கிராம் 630 மஞ்சாடி நிறையுடைய தோடு, 625 மில்லி கிராம் நிறையுடைய பஞ்சாயுத பென்டன், என்பன மீட்கப்பட்டுள்ளதுடன், வங்கிகளில் அடகு வைத்ததாக கூறப்படும் நகை ரசீதுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பெண் வல்வெட்டித்துறை பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரை பருதித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *