தோட்டத்தைச் சுற்றியுள்ள முக்கிய நகரங்களில் பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களால் விநியோகிக்கப்படும் கோதுமை மாவை விற்பனை முகவர்கள் வைத்திருந்தாலும், அவ் விற்பனை முகவர்கள் தங்களுக்குத் தேவையான கோதுமை மாவை நிறுவனத்தின் அறிவுறுத்தல்களின்படி வரம்புடன் வெளியிடுவதாக உணவகம் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இரண்டு நிறுவனங்களும் கோதுமை மாவின் விலையை குறைக்காத நிலையில், குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா கிடைத்தால், தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டங்களின் விலையைக் குறைப்பதாக உணவகம் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்
Be First to Comment